ஹொய்சாளர் கால பள்ளிவாசல்
ஹொய்சாளர் கால பள்ளிவாசல்:
திருச்சியின் பிரசித்தி பெற்ற சமயபுரத்தின் அருகே வெங்ககுடி எனும் ஊர் அமைந்துள்ளது. பதிநன்கு-பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி இது. கல்வெட்டில் இவ்வூர் விக்ரமபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. பெரிய வளாகத்துடன், மசூதியின் முன்பு சத்திரத்துடனும் அமைந்துள்ளது. மசூதியின் உள்ளே பராமரிப்பின்றி நிறைய சமாதிகள், கல்கட்டுமானங்கள் கேட்பாரின்றி பாழ்பட்டு கிடக்கிறது.
ஹொய்சாளர் வருகை:
சுந்தரபாண்டியனின் எழுச்சிக்குப்பின் சோழனான மூன்றாம் ராஜராஜனிற்கு உதவியாய் அவரது உறவினரான ஹொய்சாளர் வீரநரசிம்மர் வருகிறார். இவர் கண்ணணூரை தலைநகராய் கொண்டு ஆட்சிபுரிகிறார். இவருக்குப்பின் சிலகாலம் திருச்சிராப்பள்ளியின் பெரும்பகுதி ஹொய்சார் ஆளுகையில் இருந்தது.
ஹொய்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் வீரசோமேஸ்வரர் . இவர் பெயரிலேயே இன்று திருச்சியிலுள்ள சோமரசன்பேட்டை அமைந்துள்ளது! அதன்பின் ஹொய்சாளரை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கின்றனர் முஸ்லீம்கள்.
அப்போது கட்டப்பட்ட மசூதியே இது. இப்பகுதியில் ஹொய்சாளர்-மும்மதியர் கடும்போர் மூண்டதற்கு அடையாளமாய் கண்ணனூர் போசளீஸ்வரர் கோவிலும், அங்குள்ள நடுகல்லும் சாட்சியளிக்கிறது.





Comments
Post a Comment