Posts

Showing posts from July, 2020

சோழமாதேவி

Image
சோழமாதேவி : திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்காவில் உள்ளது இவ்வூர். இருபது வருடம் முன்பு பாழ்பட்டு இருந்த கோவில், உள்ளூர் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் முயற்சியால் பலமுறை அரசிற்கு மணு கொடுக்கப்பட்டு, இக்கோவிலின் கல்வெட்டு சிறப்பு கருதி மீட்கப்பட்டது. Raman Sthapathy Trichy ஐயா அவர்களால் பணிசெய்யப்பட்டு புத்துயிர் பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. ராஜராஜசோழனின் மனைவியின் பெயர் சோழமாதேவி, அவர் பெயரில் இவ்வூர் அன்று முதல் இன்றுவரை அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வூரிலிருந்து தஞ்சைபெரியகோவில் மெய்க்காவலுக்கு நால்வர் அன்று சென்றுள்ளனர். இக்கோவிலில் உள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு ஆதிசங்கரின் பகவத் பாதீயம் எனும் சாரீர பாஷ்யத்திற்கு உரை எழுதிய சதானந்த பிடாரர் என்பவர் தினமும் இக்கோவிலில் அந்த உரையை சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அவரின் கல்விப்பணிக்காக நிறைய கொடைகள் வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு செய்தியை கேள்விப்பட்டு காஞ்சி மட சங்கராச்சாரியர் இத்தல இறைவனை தரிசித்து சென்றுள்ளார். அவரை ஊரார் வெகுவிமரிசையாக வரவேற்றுள்ளனர். இக்கோவில் 993ல் கட்டப்பட்டதை கல்வெட்டு தெரிவி...