Posts

Showing posts from January, 2022

தேவரடியார் எழுப்பிய கோவில்

Image
 தேவரடியார் எழுப்பிய கோவில்: திருநலக்குன்றம் என அன்று அழைக்கப்பட்ட இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில்,அந்த ஊரைச்சேர்ந்த தேவரடியாரான துக்கையாண்டர் மகள் நாச்சி என்பவர்,ஒரு அம்மன் கோவில் பிற்கால பாண்டியரான வீரபாண்டியன் ஆட்சி காலத்தில் கட்டியுள்ளார். அம்மன் பெயர் திருக்காமக்கோட்டத்து நாச்சியார் என கல்வெட்டில் குறிக்கப்படுகிறார். இந்த அம்மன்,மேற்றளி என அன்று கல்வெட்டில் அழைக்கப்பட்ட குடைவரைகோவில் ஈசனின் இணையராக கல்வெட்டு குறிப்பிடுகிறது.