Posts

Showing posts from February, 2021

ஹொய்சாளர் கால பள்ளிவாசல்

Image
  ஹொய்சாளர் கால பள்ளிவாசல்: திருச்சியின் பிரசித்தி பெற்ற சமயபுரத்தின் அருகே வெங்ககுடி எனும் ஊர் அமைந்துள்ளது. பதிநன்கு-பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி இது. கல்வெட்டில் இவ்வூர் விக்ரமபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. பெரிய வளாகத்துடன், மசூதியின் முன்பு சத்திரத்துடனும் அமைந்துள்ளது. மசூதியின் உள்ளே பராமரிப்பின்றி நிறைய சமாதிகள், கல்கட்டுமானங்கள் கேட்பாரின்றி பாழ்பட்டு கிடக்கிறது. ஹொய்சாளர் வருகை: சுந்தரபாண்டியனின் எழுச்சிக்குப்பின் சோழனான மூன்றாம் ராஜராஜனிற்கு உதவியாய் அவரது உறவினரான ஹொய்சாளர் வீரநரசிம்மர் வருகிறார். இவர் கண்ணணூரை தலைநகராய் கொண்டு ஆட்சிபுரிகிறார். இவருக்குப்பின் சிலகாலம் திருச்சிராப்பள்ளியின் பெரும்பகுதி ஹொய்சார் ஆளுகையில் இருந்தது.  ஹொய்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் வீரசோமேஸ்வரர் . இவர் பெயரிலேயே இன்று திருச்சியிலுள்ள சோமரசன்பேட்டை அமைந்துள்ளது! அதன்பின் ஹொய்சாளரை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கின்றனர் முஸ்லீம்கள். அப்போது கட்டப்பட்ட மசூதியே இது. இப்பகுதியில் ஹொய்சாளர்-மும்மதியர் கடும்போர் மூண்டதற்கு அடையாளமாய் கண்ணனூர் போசளீஸ்வரர் கோவிலும், அங்குள்ள நடுகல்லும் சாட்சி...

முத்தரையர் குடைவரை:

Image
  முத்தரையர் குடைவரை: புதுக்கோட்டை -பொன்னமராவதி சாலையில் உள்ள வையாபுரி என்ற ஊரினை தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் பூவாலைக்குடி, இங்குள்ள ஏரியினை கடந்துதான் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும், இருசக்கர வாகனங்களில் செல்வது உகந்தது.  முறையான பாதையில்லை. மழைகாலத்தில் செல்வது சிரமம்தான். காரையூர் விளக்கு வழியாகவும் இவ்வூரினை அடையலாம். கோவிலின் அமைப்பு: இக்குடைவரை கருவறை, கருவறை முன்சுவர், முகமண்டபம், பெருமண்டபம், முன்பண்டபம் என்ற கூராய் கட்டப்பட்டுள்ளது.  பெருமண்டபத்தில் அம்மன்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் குடைவரைக்கு வெளியே உள்ள அம்மன் சுந்தரவல்லி என அழைக்கப்படுகிறார். மேலும், பைரவர், சண்டேசர், ஆறுமுகருக்கு தனித்தனியாய்  சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை அமைப்பு: லிங்கம் தாய்ப்பாறையில் குடையப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அனைத்து குடைவரையிலும் லிங்கத்திருமேனிகள் தாய்ப்பாறையில் அமைந்தது இம்மாவட்டத்திற்கு உள்ள சிறப்பு. பெரும்பாலும் பாண்டியர் குடைவரைகள் அனைத்துமே தாய்ப்பாறை லிங்கங்களே. இக்கோவிலின் கருவறை வாயிலின் இடப்புறம் நீர் வெளியேறும் வண்ணம் வெட்டப்பட்...