பல்லவர் கற்றளி:
பல்லவர் கற்றளி: இன்று திருப்பட்டூர் என அழைக்கப்படும் திருபிடவூரில், இராஜசிம்மனால் காஞ்சியில் தோற்றுவிக்கப்பட்ட கைலாசநாதர்கோவில் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது ஒரு கோவில். பல்லவர்கால கல்வெட்டுகள் இங்கு கிடைக்காவிடினும், இக்கோவிலின் தோற்றம் காஞ்சி பெரியகோவிலை நகலெடுத்தவண்ணம் உள்ளதால், இக்கோவில் இராஜசிம்மன் காலத்தில் உருவாகிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இங்குள்ள லிங்கம் பதினாறு பட்டையுடைய "தாராலிங்கம்" ஆகும். இது பல்லவர் காலத்தைய சிறப்புவாய்ந்த லிங்கம் ஆகும். மேலும் கருவறையின் பின்புறம் "சோமாஸ்கந்தர்" உருவம் அமைக்கப்பட்டு பின் அழிந்துபட்ட சுவடும் உள்ளது. கருவறையில் சோமாஸ்கந்தர் உருவம் வழக்கம் இருந்நை தொண்டைமண்டல பல்லவர்கால கோவில்களில் காணலாம். இக்கோவிலின் வெளியேயுள்ள நந்தி பல்லவர்கால நந்தியாகும். இக்கோவிலில் மேலும் சிறப்பாக கருவறையைச் சுற்றி ஒரு திருச்சுற்று அறை உள்ளது. இதை "சாந்தார அறை" என்றும் அழைப்பார்கள். இவ்வகை சாந்தாரஅறை கட்டுமானம் தமிழகத்தில் வெகுசில கோவில்களில் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பம்சமாகும். கோஷ்ட சிற்பங்கள் பிற்காலத்தைய புணரமைப்பில் தம்...